Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் தொல்லை! தோணி நடிகையின் முன்னாள் காதலர் மீது 2 வழக்குகள்

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தகைய சர்ச்சைகளில் பல நடிகர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.

தோணி படத்தில் நடித்த திஷா படானியின் முன்னாள் காதலர் டிவி நடிகர் Parth Samthaan மீது ஒரு மாடல் நடிகை சென்ற மாதம் தான் பாலியல் தொல்லை என போலீசில் புகார் கொடுத்தார். அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.

அது ஒருபுறமிருக்க மற்றொரு பெண்ணும் Parth Samthaan மீது போலீசில் புகார் கூறியுள்ளார். தன் 16 வயதாக இருந்தபோதே அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் ஒரு டிவி நடிகர் மீது இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.