நடிகர் விஜய் சேதுபதி தான் ஒரு மாஸ் என நிரூபித்து வருகிறார். இடைவெளியில்லாமல் தொடர்ந்து படங்களை கொடுத்து வரும் அவர் சமீபத்தில் சினிமாவில் பணியாற்றும் 100 மூத்த கலைஞர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கும் திட்டத்தை தான் செய்ய விரும்புவதாக கூறினார்.
உலகாயுதா அமைப்பின் மூலம் செயல்படுத்தபடும் இந்த திட்டத்திற்கு பலர் வரவேற்பு தெர்வித்தனர். அதுபோல சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ் யூனியன் சங்கம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அவர் தங்களில் உறுப்பினர் என்பதில் மகிழ்ச்சி பெருமை என அதன் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.