Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸின் அடுத்த படம்!

பாகுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் நேரம் இது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள், விமர்சகர்கள் கூட அவரது அடுத்த படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் "சாஹூ" மூலம் நடிக்க தயாராகிவிட்டார்.

சாஹூவில் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான பின்புலத்தில் நடிக்கவுள்ளார். உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும் காதலும், விறுவிறுப்பும் உற்சாகமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகிறது.

அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளை, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது.

இயக்குனர் சுஜீத் இயக்க, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக சாஹூ தொடர்ந்து படமாக்கப்பட்டுவரும் நிலையில், திரையரங்குகளில் அடுத்த வாரம் வரவிருக்கும் பாஹுபலி 2 படத்துடன் நீங்கள் சாஹூவின் டீஸர் காணலாம்.

சாஹூ ஒரு மிகப்பெரிய அளவில், வானளாவிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. நினைவிருக்கட்டும் ஏப்ரல் 28 ல் சாஹூ டீஸர்!!