Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் கேர்ள் ப்ரண்ட் வயசு என்ன தெரியுமா? சார்லீ ஓபன் டாக்

சார்லீ தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர். இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. எந்த ஒரு கதாபாத்திரங்களாக இருந்தாலும் யதார்த்தமாக ஸ்கோர் செய்வார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என் கேர்ள் ப்ரண்ட்கிட்ட நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

அட..கேர்ள் ப்ரண்ட்ன்னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க, என்னோட பாட்டி, அவுங்களுக்கு தற்போது 106 வயது, இன்றும் என்னுடன் தான் இருக்கின்றார்.

அவர் தான் எனக்கு சினிமா என்பதையே அறிமுகப்படுத்தினார், பல படங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்’ என ஜாலியாக கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி தன் வெற்றிக்கு தன் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் காரணம் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.