பாகுபலி படத்தில் மிக முக்கிய அங்கம் தேவசேனா கதாபாத்திரத்திற்கு உண்டு. அழகு, வீரம் என அனுஷ்கா அசத்திவிட்டார். இப்படத்திற்கு கதை எழுதிய இயக்குனர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்.
தற்போது இவர் ஹிந்தியில் உருவாகும் தொடருக்கு கதை எழுதிவருகிறாராம். புராணக்கதையான இதில் ஹீரோயினுக்கு தேவசேனா என பெயர் வைத்துள்ளார்களாம்.
இதில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் வீரமங்கையாக நடிக்கவுள்ளாராம். இத்தொடருக்கு ஆரம்ப் என பெயர் வைத்துள்ளனர்.