Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் டூ வெளிநாடு! நயன்தாரா திடீர் பல்டி

நடிகை நயன்தாரா தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வந்தார். மோகன் ராஜா இயக்கும் இப்படத்திலிருந்து திடீரென போர்ச்சுகல் நாட்டிற்கு கிளம்பி சென்றாராம்.

ஏற்கனவே கமிட்டாகி இருந்த பாலம் தெலுங்கு படம் நயன்தாராவின் பிசியால் தள்ளிப்போய்க்கொண்டிருந்ததாம். இதில் இரண்டு பாடல்கள் மட்டுமே பென்டிங்க்.

கோபி சந்த், பிரகாஷ் ராஜ், பிரம்மாணந்தம், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தின் பல பாடல் காட்சிகள் லிஸ்பன், போர்ட்டோ, அல்கார்வ், அவியாரா போன்ற அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது.