Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை கஸ்தூரியுடன் ரஜினி ரசிகர்கள் மோதல்! ட்விட்டர் யுத்தம்

நடிகை கஸ்தூரி சமீபகாலமாகவே சமுதாய பார்வை நோக்குடன் தனது கருத்துக்களை பதிவிட்டுவருகிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றிய தன் கருத்துக்களை நேரடியே முன்வைத்திருந்தார்.

ரஜினியின் முடிவு குறித்து கஸ்தூரி சமூகவலைதளத்தில் தனது கருத்தை சொல்ல, சில ரசிகர்கள் அவருடன் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர். இதில் ரசிகர் ஒருவர், நீயெல்லாம் அவரை பற்றி பேசுகிறாயா. மூடிட்டு போ என சொல்லியிருந்தார்.

இதற்கு கஸ்தூரி நீ பிறப்பதற்கு முன்பே நான் அவரது ரசிகை. நான் சொன்னது விமர்சனம் அல்ல. எல்லோர் மனிதிலும் இருக்கும் ஆதங்கம்.

உங்களை போன்ற மரியாதையற்ற ரசிகர்களால் தான் ரஜினிக்கு அவமானம். நீ முதலில் வாயை மூடு என பதிலலித்துள்ளார். இது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.