Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு பதிலாக வேறோரு பிளானில் இறங்கிய இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பெரிய இயக்குனர்கள் தான் படங்கள் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. நடிகர், இயக்குனருமான செல்வா தீவிரமான ரஜினி ரசிகர்.

ஆத்தா உன் கோவிலிலே படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 50 படங்களில் நடித்துள்ளார் . ரஜினியை வைத்து நீண்ட நாட்களாக படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையாம்.

ஆனால் இப்போது அது சாத்தியப்படாததால் ரஜினி ரசிகர்களை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம். இதில் ரமேஷ் திலக், ஆதவன், விஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க இருக்கிறார்கள்.

மேலும் இதில் தம்பி ராமையா, பொன்னம்பலம், யோகி பாபு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கிறார். மேலும் படத்திற்கு ரஜினியின் பிறந்த தேதியான 12.12.1950 ஐ பெயராக வைத்து விட்டார்களாம்.