Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத வாயால சொல்லமாட்டேன்! நடிகை கௌதமி பேட்டி

நடிகை கௌதமி ஒரு சமூக ஆர்வலராக உள்ளார். சமூக நல விசயங்களில் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கரூரில் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டார்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான பெண்களுக்கும் போதிய அளவில் இல்லை. படித்த பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுக்க பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். நாட்டில் விவசாயம் நசுக்கப்படுகிறது. இந்த அரசால் விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா. எல்லோருக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகிறது என கூறினார்.