Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளரிடம் கெஞ்சிய பிரபல சீரியல் நடிகை! புலம்பும் நந்தினி

சீரியல் மீதும் அதில் நடிக்கும் செலிபிரிட்டீஸ் மீதும் மக்களுக்கு இருக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. பல சீரியல்களும் மக்களிடையே ரீச்சாகி விடுகிறது.

நந்தினி சீரியல் நித்யா பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பது நந்தினி சீரியலை பலரும் ரசிப்பதாக என்னிடம் நேரிலேயே கூறியிருக்கிறார்கள்.

கன்னடத்திலும் கங்கா என்ற பெயரில் இதில் நடித்ததில் மகிழ்ச்சி. அப்பாவியாக நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நந்தினியில் முற்றிலும் வித்தியாசம்.

பாம்பாக மாறி பழி வாங்குவது ஒரு திகில் அனுபவம். முதலில் நந்தினி நல்லவள் என பெயர் வாங்கினேன். ஆனால் நான் பழி வாங்குவதால் என்னை எல்லோரும் திட்டுகிறார்கள். எங்கு போனாலும் விடாமல் பிடித்து விடுகிறார்கள்.

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒரு மாதிரி இருந்தது. தயாரிப்பாளரிடம் விசயத்தை சொல்லி என் ரோலை பாசிட்டிவாக மாற்றிவிடுங்கள் என கேட்டேன். அவர் இது தான் உனக்கு கிடைத்த பாராட்டு என சொல்லிவிட்டார் என்கிறார் நடிகை நித்யா ராம்.