Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாங்க நன்றாக இருக்கிறோம், நீங்க ஏன் இப்படி! அஜித், விஜய் ரசிகர்களுக்கு தான் சொன்னாரா விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எல்லோருக்குமே பிடித்த நடிகர். இவர் தற்போது மாதவனுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவர் வேதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் இரண்டு நடிகர்கள் போட்டி குறித்து கேட்ட போது ‘நாங்க எல்லோரும் இங்கு நன்றாக இருக்கின்றோம்.

நீங்கள் ஏன் ஒரு நடிகருக்காக இப்படி அடித்துக்கொள்கிறீர்கள், மேலும், குடும்பத்தை பற்றி திட்டிக்கொள்வது எல்லாம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

ஒரு நடிகனுக்காக நீங்கள் காட்டும் முக்கியத்துவத்தை, அரசியலில் காட்டுங்கள்’ என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இரண்டு நடிகர்களின் போட்டி என்பது எல்லோருக்குமே தெரியும் விஜய், அஜித் ரசிகர்களின் மோதல் தான் என்று, அவர்களை மனதில் வைத்து தான் விஜய் சேதுபதி இதை கூறியிருப்பார் என்று தெரிகின்றது.