Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே இரவில் உயிரை விட்ட பிரபல நடிகர்! ஏன் தெரியுமா

சினிமா திரையில் காமெடி நட்சத்திரமாக தோன்றி பலரையும் சிரிக்க வைக்கும் பிரபலங்களின் வாழ்க்கைக்கு பின் சில சோகமான சம்பவங்களும் உண்டு.

அப்படியானவர்களில் ஒருவர் தான் நடிகர் என்னத்த கண்ணையா. எம்.ஜி.ஆர் காலத்தில் அறிமுகமான இவர் ஒரு சின்ன கேரக்டர் என்றால் கூட தன்னுடைய ஸ்டைலில் அசத்திவிடுவார்.

இவரின் பிரபல வசனமான என்னத்த சொல்லி என்னத்த பண்ண என்பதே இவருக்கு புகழை தேடித்தந்தது. ஆனால் சோகம், வறுமை என வாழ்க்கை பல சிக்கல்கள் இவரை வாட்டி வதைத்தது. நடிப்புக்காக பல இடங்களை தேடி அலைந்தார்.

இப்படியே 40 வருடங்கள் ஓட தன் நம்பிக்கையை இழக்காமல் சினிமாவை நோக்கி மீண்டும் ஓடினார். பின் வடிவேலுவுடன் நடித்த வரும் ஆனா வராது காமெடி இவருக்கு ஒர்க்கவுட் ஆக வாழ்க்கை மாறியது.

வசதியை அனுபவிக்க வயது போய்விட்டது. ஆம் பசியும் பட்டினியுமாக அலைந்த இவர் ஒரு நாளில் இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். காலம் சிரித்தது. ஆனால் இவர் சிரிக்கவில்லை.