Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடி நடிகர் தாடி பாலாஜி பணமோசடி செய்தாரா? கோர்ட்டில் ஆஜர்

பிரபல காமெடி நடிகரான பாலாஜி மீது சமீபத்தில் அவரது மனைவி புகார் கொடுத்திருந்தது பரபரப்பானது. டிவி ஷோக்களில் நடுவராக இருக்கும் இவர் மீது வங்கி ஏ.டி.எம் மோசடி புகார் கூறப்பட்டது.

திருப்பூரில் கடந்த 2014 ல் ATM ல் பணம் நிரப்பும் பணியாளர்கள் மோசடியில் ஈடுபட்டதாக செக்யூரிட்டி நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதில் கைது செய்யப்பட்ட விஷ்ணு வர்த்தன் என்பவர் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக தாடி பாலாஜிக்கு ரூ 5 லட்சம் கொடுத்தாக கூறினார்.

மேலும் இதில் நிகழ்ச்சியும் நடக்கவில்லையாம். பாலாஜி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லையாம். இவ்வழக்கு தொடர்பாக தாடி பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.