Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோயின்களுக்கு வேலையே இருக்காது, இருந்தாலும் எனக்கு கிடைத்தது- நயன்தாரா ஓபன் டாக்

நயன்தாரா தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தில் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை நடித்துவிட்டார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த இருமுகன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருது SIIMA விருது விழாவில் கிடைத்தது. இவ்விருதை பெற்ற பிறகு நயன்தாரா ‘ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும், ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிதும் வேலை இருக்காது, அதுவும் விக்ரம் சார் போல் சிறந்த நடிகர் படத்தில் ஸ்கோர் செய்வது கஷ்டம்.

ஆனால், அவருடன் நடித்தது மட்டுமில்லாமல், எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது பெருமையாக உள்ளது’ என கூறியுள்ளார்.