Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் கொக்கி குமாரை சந்தித்ததே இல்லை- செல்வராகவன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வரவிருக்கின்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் கடந்த வந்த பாதை குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘எனக்கு ஒரு கட்டத்தில் சினிமா தான் வரும் என தெரிந்துவிட்டது, என் அம்மா பூஜை அறையில் கதவை மூடிக்கொண்டு அமெரிக்கா போ என்று அழுதார்கள்.

ஆனால், நான் படம் தான் எடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன்’ என கூறியுள்ளார்.

மேலும், புதுப்பேட்டை படத்திற்காக எத்தனை கொக்கி குமாரை பார்த்தீர்கள் என்று கேட்க, ‘நான் எந்த கொக்கிகுமாரையும் பார்த்தது இல்லை.

ஏனெனில் நான் வளர்ந்ததே அந்த மாதிரி ஒரு பகுதியில் தான், இதற்காக நான் யாரையும் தேடி போய் பார்க்கவில்லை’ என கூறியுள்ளார்.