Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதெல்லாம் கேட்காதீங்க! டென்ஸனான ராணா!

நடிகர் ராணா இன்று பாகுபலிக்கு பின் ஒரு முக்கிய நடிகராகவிட்டார். தமிழ், தெலுங்கு என இரு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சர்ச்சைகளில் சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவது இயல்பே.

அதே போல இவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் காதல் என பல கிசுகிசுக்கள் எழுந்தது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்க சற்று உணர்ச்சிவசம் அடைந்தார்.

காதல், நிச்சயதார்த்தம் என பல செய்திகள் வந்துள்ளது. ஆனால் நான் கடந்த 3 வருடங்களில் 6 படங்களில் நடித்துவிட்டேன். சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன்.

மேலும் சுயமாக ஒரு ஊடக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த பிசியான நேரத்தில் என்னை பற்றிய வதந்திகளை நினைத்து கவலைப்படுவதில்லை. திரிஷாவும் இதைப்பற்றி நினைக்கவில்லை.

தயவு செய்து ஊடகங்கள் இதுபோன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.