Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரின் படத்தில் ஓவியா நடிக்க மறுத்ததற்கு காரணம் இதுதானாம்!

ஓவியா மக்களின் அபிமான நடிகையாகிவிட்டார் என்பதை விட மக்கள் மனதில் இடம் பெற்ற சக மனுஷி என்று சொன்னால் சரியாக பொருந்தும். காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் நடிக்கவில்லை.

நிஜமாகவே இருந்தார் என்பதால் தான். அவரின் மார்கெட் உயர்ந்துள்ளதால் வாய்ப்புகளோடு, அவர் நடித்து வெளிவராமல் இருந்த படங்கள் கூட இப்போது வெளியே தலைகாட்ட தொடங்கியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012 ல் விமல், ஒவியா, அஞ்சலி, சிவா நடிக்க கலகலப்பு படம் வெளியானது. தற்போது இதன் 2ம் பாகத்தை எடுக்கிறாராம் சுந்தர்.சி. அதே ஹீரோ இப்படத்தில் இருந்தாலும் ஓவியா நடிக்கவில்லையாம்.

இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தாலும், சொல்லப்போகும் விசயத்தை பார்த்தால் சந்தோசப்படுவீர்கள். ஆம். கலகலப்பு 2 ல் கிளாமராக நடிக்க சொன்னார்களாம்.

ஆனால் ஓவியா, பிக்பாஸ் மூலம் ரசிகர்கள், மக்கள் என அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் கிளாமராக நடிப்பது வேண்டாம் என இப்படத்தை தவிர்த்துவிட்டாராம்.