Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெய் சிலிர்த்து நின்றேன், பிக்பாஸ் தோல்வி குறித்து முதன் முறையாக சினேகன் ஓபன் டாக் (வீடியோ இணைப்பு)

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியோ 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. பலரும் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஆரவ் தான் வெற்றியாளர் என கமல் அறிவித்தார்.

இவை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர், இந்நிலையில் சினேகன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு சில கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதில் ‘எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி, நீங்கள் இத்தனை நாட்கள் ஆதரவு தராமல் அந்த வீட்டில் என்னால் 100 நாட்கள் இருந்திருக்க முடியாது.

மேலும், ஒரு அச்ச உணர்வுடன் தான் வெளியே வந்தேன், ஆனால், எனக்காக டிவியை எல்லாம் உடைத்தார் ஒரு நண்பர், ஒரு இடத்தில் பஸ் மறியல் கூட நடந்ததாம்.

இதையெல்லாம் கேட்கும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.