Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக மேடையில் அங்கிகாரம் பெற்ற அசோக்செல்வன் மற்றும் பிரியா ஆனந்த்!

நடிகர் அசோக் செல்வன் கூட்டத்தில் ஒருத்தன் படம் மூலம் சமீபத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றார். அவரோடு நடிகை பிரியா ஆனந்த் நடித்திருந்தார். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்த மாயா என்ற குறும்படத்தில் நடித்தார்கள். 11 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இப்படத்தை அனி சசி என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது இதனை தொடர்ந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடக்கும் தெற்காசிய பட விழாவிற்கு கடந்த மாதம் தேர்வானது. தற்போது இப்படத்திற்கு சிறந்த குறும்படம் என விருது வழங்கியுள்ளார்கள்.

என்னுடைய நண்பர்கள் பலர் என்னை குறும்படத்தில் நடிக்க வேண்டாம், சினிமா வாய்ப்பை பாதிக்கும் என்றார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை என்ன மீடியம் என்பது விசயமல்ல. கதை தான் முக்கியம் என வெற்றியுடன் சொல்கிறார் அசோக்.