Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் ஹாசனின் நீண்டகால முடிவை மாற்றவைத்த இயக்குனர்!

தென் இந்திய சினிமாவிலே இப்பொழுது கலைஞர்களும் படைப்புகளும் அதிகமாக வெளிவரத் தொடங்கி விட்டது. பிரித்தானியாவை சேர்ந்த ஒரு ஈழத்து ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் என்ற புகழை பெற்றுள்ளார் NT நந்தா.

பிரித்தானியாவில் உருவாகி இருக்கக்கூடிய சில திரைப்படங்களிலும், சர்வதேச அளவிலான விளம்பரங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அவர், அனு ஹாசன், நாசர் போன்ற பிரபலங்களை வைத்து ஹாலிவுட் தரத்தில் வல்லதேசம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் லண்டனில் எடுக்கப்பட்டதாகும்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜாவும், உலக நாயகன் கமல் ஹாசனும் கலந்து NT நந்தாவை பாராட்டினர். பெண்களை வைத்து படம் எடுப்பவர்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் NT நந்தா அவர்கள் ஒரு பெண்ணை கதாநாயகியாக வைத்து ஒரு முழு நீள படத்தை தில்லாக எடுத்திருக்கிறார் என்று கூறிய கமல் ஹாசன், இதை அவர் ஒரு advanced booking ஆகா எடுத்து கொள்ளுகிறேன் என்றும் கூறினார்.

30 வருடமாக ஒளிப்பதிவாளரை மாற்றாமல் வைத்திருந்தேன் இனிமேல் நந்தா அவர்கள் தான் எனது ஒளிப்பதிவாளர் என்பதையும் அழுத்தமாக பாரதிராஜா அவர்கள் கூறி இருந்தார்.