Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது- பிரபல நடிகரின் கருத்து

விஜய்யின் மெர்சல் தான் இப்போது தொலைக்காட்சி, சமூக வலைதளம் என எல்லா இடத்திலும் பேசப்படுகிறது. இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் இருக்க கூடாது என்று ஒரு அரசியல் கட்சி பெரிதாக பிரச்சனை செய்திருக்கின்றனர். பிரச்சனைகளை சமாளிக்க தயாரிப்பு குழு அந்த காட்சிகளை நீக்குவதாக கூறியிருக்கின்றனர்.

இதனால் பலரும் காட்சிகள் நீக்க கூடாது என்றும் அந்த அரசியல் கட்சி மீது தங்களது கோபத்தையும் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள். மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.