Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபத்தில் சிக்கிய நடிகை பார்வதி! என்ன செய்தார் தெரியுமா

மலையாள நடிகை பார்வதிக்கு தமிழ் சினிமாவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையாள சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் கொச்சி, பனம்பள்ளி ஏரியாவில் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது மின்சார கம்பி ஒன்று வாகனங்கள் மீது தொடும் நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அந்த வழியில் தொங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்ட அவர் உடனே தன் காரை அப்படியே நிறுத்தியுள்ளார்.

அங்கேயே சாலையில் நின்று மற்ற வாகனங்களை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல வேண்டாம் என ஓட்டுனர்களை அறிவுறுத்தினாராம். வாகனங்களை மாற்றுப்பாதையில் விட்டுள்ளார்.

மேலும் சம்மந்தப்பட்ட அரசு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அதை சரி செய்யும் வரை அங்கேயே இருந்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே இருந்தாராம்.

இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.