Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அது உண்மையா

ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். சமீபத்தில் வெளியான ஜெய் லவ குஷா படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவரது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இவர் முகம் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல்கள் பரவியது. இதனால் சிலர் அதெல்லாம் வேண்டாம் எனவும், வழக்கமானதை விட இதில் அழகு குறைந்திருக்கிறது என கூறியிருந்தனர்.

ஆனால் புகைப்படக் கலைஞர்கள் இதை மறுத்துள்ளனர். அவர் மேக்கப் இல்லாமல் இருப்பதால் இப்படி இருக்கிறது என கூறியுள்ளனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.