Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் காப்பி குறித்து மனம் திறந்த மோகன்ராஜா

தனிஒருவன் என்ற படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் மோகன்ராஜா. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தில் பிஸியாகவுள்ளார்.

இப்படம் குறித்து இவர் பேசுகையில் இப்படம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களுக்கான படம் என்று கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் காப்பி என்று கூறப்பட்டதே என்று கேட்க, அதற்கு அவர் ‘நானும் அதை பார்த்தேன்.

ஆனால், அவர்களுக்கு தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாமல் இருக்குமா?, நானும் அந்த ஆங்கிலப்படத்தை பார்த்துள்ளேன்.

எங்களுக்கு இந்த படத்திற்கு இப்படி ஒரு ஐடியா தேவைப்பட்டது, மற்றப்படி அந்த படத்திற்கும், இதற்கும் துளிக்கூட சம்மந்தமில்லை’ என கூறியுள்ளார்.