பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளர் சினேகன். யாருடனும் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், சில சர்ச்சைகளின் இவரை பெயர் அடிபட்டது.
நிகழ்ச்சி முடிந்தது வெளியே வந்த சினேகன் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார். இந்நிலையில் அடுத்து வரக்கூடிய யாரும் புத்தனில்லை படத்தில் சினேகன் ரொமான்ஸ் பாடலில் 200 பெண்களுடன் நடனமாடுகிறாராம். எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை என பாடலை அவரே எழுதியிருக்கிறாராம்.
கட்டிப்பிடி வைத்தியத்தில் சினேகன் சொன்ன லாஜிக்கை மையமாக வைத்து இப்பாடலை எடுத்திருக்கிறார்களாம். சென்னை, மலேசியா என இப்பாடலின் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது.
விஜய சேகரன் இயக்கும் இப்படத்தில் நபிநந்தி, எம் எஸ் பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்களாம்.