Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விலகி ஓட நினைக்கிறேன்! புகைப்படத்துடன் நடிகை அமலா பால் வெளியிட்ட முடிவு

நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் நடிகை அமலா பால் குறித்த சர்ச்சை வெளியானது. அவர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடாக நடந்துள்ளார் என தகவல் வெளியானது.

கேரளாவில் கார் வாங்கினால் அதிகம் வரித்தொகை செலுத்தவேண்டும் என்பதற்காக பாண்டிச்சேரியில் குறைவான வரி செலுத்தி கார் வாங்கியதாக சொல்லப்பட்டது.

இது குறித்து அம்மாநில ஆளுநர் கிரண் பேடி இது போன்ற செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள போக்குவரத்துத்துறை அமலா பால் எதையும் முறைகேடாக செய்யவில்லை என கூறியிருந்தது.

இதுகுறித்து அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் சட்டத்தை மீறவில்லை. என்னுடைய நலன் விரும்பிகளிடம் விசாரித்துவிட்டேன். தேவையில்லாத விமர்சனங்களிலிருந்து விலகி ஓட நினைக்கிறேன் என கூறியுள்ளார். தான் படகு சவாரி செய்வது போல புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.