Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசின் தவறை இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா? விஷால் சரமாரி கேள்வி

நடிகர் விஷால் அரசுக்கு எதிராகவும் சில நேரங்களில் குரல் கொடுத்து வருகிறார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு பொறுப்புகளோடு நடிப்பு என இருந்து வரும் அவர் மெர்சல் பட விவகாரத்திற்காகவும் தனது கருத்தை வெளியிட்டார்.

பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் அவர் சமீபத்தில் மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் கொடுங்கையூரில் இறந்துவிட்டார்கள். இதற்காக அவர் தன் கருத்தை வெளியிட்டதோடு அரசுக்கு பல கேள்விகளையும் வைத்துள்ளார்.

இதில் மழைக்காலங்கள் அப்பாவி மக்கள் மின்சாரம் தாக்கி பலியாவது வழக்கமாகிவிட்டது. வறட்சியின் போது விவசாயிகள் பலியாகிறார்கள். இன்னும் இந்த நிலைமையை எத்தனை காலம் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது.

சமீபத்திய மரணங்கள் சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என காட்டுகிறது. அரசின் இந்த தவறுகளுக்கு இன்னும் எத்தனை மக்கள் உயிர்களை தியாகம் செய்யவேண்டும். சிறுமிகள் இறந்தது தவறல்ல. குற்றம் என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.