Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீரன் ஷூட்டிங்காக ராஜஸ்தான் சென்றபோது நடந்த சுவாரசியம்! கார்த்தி ஒபன் டாக்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இம்மாதம் வெளியாகயிருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கார்த்தி பேசினார். அவர் அப்போது இப்படத்தின் கதை நான் சிறுத்தை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே வந்துபோனது.

மீண்டும் என்னை நோக்கியே இந்த கதை வந்தது. அப்போதே இதை யோசித்தேன் இக்கதை நம்மையே சுற்றி வருகிறதே என்று. பின் முடிவெடுத்து நடித்தேன். ராஜஸ்தான், ஜெய்சால்மர் என ஷூட்டிங் நடந்த போது சிரமப்பட்டோம். ஆனால் அங்கே திடீரென கார்த்தி வருகிறார் என தமிழ் குரல் கேட்டது.

அந்த மக்கள் வேறுயாருமில்லை. சென்னை மக்கள் தானாம். பூஜைக்காக, குடும்ப நிகழ்ச்சிக்காக வந்தோம் என கூறினார்கள். இப்படத்தில் வேறெந்த போலிஸ் படம் போல இருக்காது. இது ஒரு முழு ஆக்‌ஷன் படம். பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என கூறினார்.