Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிரபலங்களை நீங்களும் சந்திக்கலாம்! எப்போது தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே முதல் சீசன் முடிந்து ஆரவ், சினேகன், ஹரீஷ் ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்குமே என்பது பலரின் ஏக்கம்.

போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பிசியாகிவிட்டனர். அடிக்கடி அவர்கள் பார்ட்டி, ஹோட்டல்களில் கூடி பொழுதுபோக்கி வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அடிக்கடி வெளியாவதை காணமுடிகிறது.

இந்நிகழ்ச்சியில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானவர் காயத்திரி ரகுராம். இவர் தற்போது ட்விட்டர் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார். வரும் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்ப்பாக்கத்தில் புதில் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

என்னுடன் மற்ற ஹவுஸ் மேட்ஸையும் நீங்கள் சந்திக்கலாம் என அவர் கூறியுள்ளார்.