Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் அறம் பட இயக்குனருக்கு நள்ளிரவில் நடந்த எதிர்பாராத சம்பவம்! மௌனம் களைத்த மனவேதனை

நயன்தாரா கலெக்டராக நடித்து வெளியான அறம் படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வசூலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தற்போது இயக்குனர் மனவேதனையுடன் ஒரு விசயத்தை பதிவு செய்துள்ளார்.

படத்தை அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் பலர் பாராட்டினார்கள். குழந்தைகள் விழுந்த சம்பவத்தை வைத்து தான் கதை எழுதினேன். இதை நயன்தாரா தயாரிப்பார் என்பதால் தான் அவரிடம் சொன்னேன்.

ஆனால் அவர் நடிப்பார் என்பது எதிர்பாராதது. அவர் நடித்ததால் வசனத்தை ஸ்பிரிட்டாக வைத்தேன். நடிகைகளும் ஹீரோயிசன் பண்ணட்டுமே. நடிகைகள் வற்புறுத்தி கிளாமராக நடிக்க வைக்கப்படுகிறார்கள்.

தரமுள்ள படத்தை கொடுத்த எனக்கு அதன் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியவில்லை. இரவில் எனக்கு போன் காலில் சிலர் என்னையும் என் குடும்ப பெண்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுக்கின்றனர்.

இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். எதுவாக இருந்தாலும் பொறுமையாக பேசி தீர்க்க தயாராக இருக்கிறேன் என இயக்குனர் கோபி நயினார் கூறினார்.