Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நற்குண நங்கையாக நாணத்துடன் நமிதா! நமிதா கல்யாண வைபோகமே

அன்று மச்சான்ஸ் நடிகை. இன்று பிக்பாஸ் நமீதா. அவர் சொன்ன இஞ்சி, ஏலக்காயை மறக்க முடியாது. நாளை அவருக்கு திருமணம். இதை தமிழ் நாடு மட்டுமல்ல, கேரளா மச்சான்களாலும் ஏற்க முடியாது.

தெலுங்கு சினிமாவில் படத்தயாரிப்பாளரான வீரேந்திர சவுத்ரியுடன் நாளை கைகோர்க்கிறார். நண்பர்களான இவர்களது திருமணம் நாளை திருப்பதியில் நடக்கிறது.இதற்கான மெஹந்தி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

புகைப்படங்கள் வெளியாகின. நாளை காலை 5.30 மணிக்கும் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. இதில் பிரசன்னா, சினேகா, பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். திருமணம் முடிந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த பிளான் வைத்திருக்கிறாராம்.