Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ஒரு பவர் ஃபுல் மனிதர்! பிரபல வில்லன் ஓபன் டாக்

அஜித் சினிமாவில் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரே நடிகர் பலர் சொல்வார்கள். வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் வருடம் முழுக்க பேசும் படியாக அமைந்து வருகிறது.

இம்முறை என்னவோ சீக்கிரமே அவரின் அடுத்த படம் பற்றிய தகவல் சீக்கிரம் வெளியானது. அவருடன் நடிக்க சினிமாவில் இருப்பவர்கள் யாருக்குத்தான் ஆசை இருக்காது.

சமீபத்தில் தீரன் படம் மூலம் கொடூர வில்லனாக நடித்து தன் பக்கம் கவனம் ஈர்த்தவர் அபிமன்யூ சிங். தீரன் ஹிட்டானதால் இவருக்கு பல படங்களுக்கான வில்லன் வாய்ப்பு வந்துள்ளதாம்.

ஆனால் சமீபத்தில் அஜித் பற்றி பேசிய போது அவர் நடிப்பில் பாயும் புலி போன்று பவர்புல் ஆனவர். அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட தனக்கு வேறு மகிழ்ச்சி கிடையாது என அபி கூறியுள்ளார்.