Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்.ஜே.பாலாஜி இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாரா? பிரபல இயக்குனர் நன்றி

ஆர்.ஜே.பாலாஜி யார் என்பது யங் தலைமுறைக்கு நன்றாக தெரிந்திருக்கும். பிரபல FM ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். சென்னை வெள்ளம் வந்தபோது உடனே இறங்கி உதவி செய்தார். சமூக நலனுக்கான பல விசயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இதில் தற்போது அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து விபத்தில் கையை இழந்த தர்மபுரி பூஜா என்ற பெண்ணின் தம்பிக்கு உடனடியாக செயற்கை கை பொருத்த பண உதவி செய்துள்ளனர்.

இதற்கு ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.