Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழைய நட்பை மறவாமல் நண்பருக்கு சர்ப்பிரைஷ் கொடுத்த அஜித்!

அஜித் சினிமாவில் இன்று பெரும் இடத்தில் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும். அவர் வழி தனி என பலரும் சொல்லுபடியாக அமைந்துவிட்டது. இவர் அனைவருக்கும் மதிப்பு கொடுப்பார்.

எல்லோரிடமும் நலம் விசாரிப்பார் என அவருடன் படங்களில் வேலை செய்தவர்கள் கூறுவார்கள். இந்நிலையில் அஜித், விக்ரம் இருவரும் ஆரம்ப கால நண்பர்கள். ஒரே வருடத்தில் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர்கள்.

விக்ரம் கூட அப்போதைய படங்களில் அஜித்திற்காக டப்பிங் பேசியுள்ளாராம். பின் இவர்கள் இருவரும் 1997 ல் வந்த உல்லாசம் படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அஜித் கடந்த பல வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் விக்ரம் மகள் திருமண பார்ட்டிக்கு சில சினிமா வட்டாரங்களை அழைத்திருந்தாராம்.

அஜித்திற்கும் அழைப்பு போயிருக்கிறது. இந்த பார்ட்டியில் விஜய்யும் கலந்து கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் அஜித் தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இது நட்பின் அடையாளமாக அனைவரும் திகைத்து பார்த்திருக்கிறார்கள்.