டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் டிடி இன்று நடந்த வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இசைவெளியீட்டு விழா முடிவில் டிடி புகைப்பட கலைஞர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கிக்கொண்டிருந்தார். முதலில் அருகில் இருப்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள், பின்னர் தூரத்தில் கேமரா வைத்துள்ளவர்கள் எடுத்து கொள்ளட்டும் என கூறினார்.
எல்லோரும் புகைப்படம் எடுத்து முடித்தபிறகு "இவங்க விஜய் டிவி மாதிரி.. எடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நாம கிளம்பலாம். காலைல 4 மணிக்கு தான் விடுவாங்க.. நாம carefulla இப்போவே கிளம்பலாம்" என கூறி கலாய்த்தார்.