Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதே டிசம்பரில் தான் விஜய் அன்று ஒரு சாதனை செய்தார்! ரீவைண்ட்

விஜய் படங்கள் மீதான எதிர்பார்பு இருந்தாலும் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் எப்போதுமே இருப்பதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் வந்த மெர்சல் படமும் சர்ச்சையை சந்தித்தது.

ஆனால் கடந்த 2014 ல் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கத்தி. படம் குறித்து எந்த பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் அந்நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் இலங்கை தமிழீழ பிரச்சனையால் சர்ச்சைக்குள்ளானது. படம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு வெளியானது.

அந்நேரம் இந்த பிரச்சனையால் மட்டுமல்ல, கத்தி 100 வது நாள் என பல விசயங்களால் விஜய் Google இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர் என இடம் பெற்றார்.

அதே போல கடந்த 2016 ல் அவர் அதிகம் தேடப்பட்ட நடிகர் என மீண்டும் இடம் பிடித்தார்.