Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவின் பாலியின் ரசிகர்களிடம் சிக்கிய நடிகர்! பகிரங்கமாக மன்னிப்பு

நிவின் பாலி நடிப்பில் ரிச்சி படம் நேற்று வெளியானது. படம் புரியவில்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். சில எதிர் விமர்சனங்களும் வந்தன. இது உளிதவரு கண்டத்தே என்ற கன்னட படத்தின் ரீமேக்.

இந்நிலையில் மலையாள நடிகரான ரூபேஷ் பீதாம்பரன் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இதில் அவர் கன்னட படம் பற்றியும் அதில் நடித்திருந்த ரக்சித் ஷெட்டி சிறப்பாக நடித்திருந்ததாக கூறியிருந்தார்.

ஆனால் ரிச்சியை மறைமுகமாக விமர்சிப்பது போல நிவின் ரசிகர்கள் மத்தியில் பரவியது. இதனால் அந்த ரசிகர்கள் இவரை விமர்சிக்க பேஸ்புக்கில் வார்த்தை மோதல் நடந்துள்ளது.

இதனால் ரூபேஷ் நான் நிவின் பாலியையோ அவரின் ரிச்சி படத்தை பற்றியோ குறை கூறவில்லை. எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

ரிச்சி திரைவிமர்சனம் படிக்க