Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார்! சொன்னது யார்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு. இதற்கான அச்சாரத்தை போட பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதாய் அதற்கு அமைந்து விட்டது.

தற்போது அவர் விஸ்வரூபம் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். சமீபத்தில் அரசியல் குறித்து அவரிடமிருந்து எந்த விதமான தகவல்கள் இல்லை.

சேலத்தில் அவரது நற்பணி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு பேசினார்.

அப்போது கமல் ஷீட்டிங் முடிந்து இம்மாத இறுதியில் தமிழ்நாடு திரும்புவார். எல்லா ஊர்களிலும் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். அவர் நிச்சயம் தமிழகத்தின் முதலமைச்சராவார்.

அரசியலுக்கு வருவார் என அவர் கூறினார்.