Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை! காரணம் இதுதானாம்

சினிமாவில் பல கலைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் பலர் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து ரசிகர்களிடத்தில் பெரும் இடம் பிடித்துள்ளார்கள்.

சமீபத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

போராளி, நவீன சரஸ்வதி சபதம் படங்களில் நடித்திருந்தாலும் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தது அவரை முகம் தெரிந்த நபராக்கிவிட்டது.

தற்போது அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். அவரின் பெற்றோருக்கு தன் மகள் படிப்பிலும் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையாம்.

இதனால் அவர் தற்போது ஆர்க்கிடெக்ட் படித்து வரும் அவர் தேர்வுகள் இருப்பதால் படங்களுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துள்ளாராம். எக்ஸாம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவதாக கூறியுள்ளாராம்.