Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடுக்கடலில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பிரபல நடிகர்! அதிர்ச்சியான சம்பவம்

அஜித் நடித்த வேதாளம் படத்தில் மாப்பிள்ளையாக நடித்தவர் அசோக் செல்வன். தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் என சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவரும் வெற்றிக்காக முயற்சிகள் எடுத்து வந்தாலும் படங்கள் பெரிதளவில் அவருக்கு அமையவில்லை. இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் கமிட்டானார்.

ஆனால் இதுவும் கிடப்பில் போடப்பட்டது. வாய்ப்பு தேடிய போது மெட்ரோ இயக்குனர் அனந்த கிருஷ்ணனின் ஆக்ஸிஜன் படத்தில் கமிட்டானார். இதில் 3 கெட்டப்களில் நடித்து வருகிறாராம்.

இப்படத்தில் ஒரு காட்சி பாண்டிசேரி அருகே நடுக்கடலில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக வந்த பேரலையில் அவர் சிக்கி திணறியுள்ளார். அவரே உடனே மீட்க வந்த படக்குழு முடியாமல் தவித்துள்ளது.

அடுத்தடுத்த வந்த அலைகளால் அவர் சுருட்டிப்போடப்பட்டாராம். பின் மீட்கப்பட்டுள்ளார். வாழ்கையில் மறக்க முடியாத சம்பவம் என அசோக் கூறியுள்ளார்.