Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தின் சிறப்பை சர்வதேச அளவில் பெற்ற பத்மாவத்!

மெர்சல் படத்தின் சாதனைகள் இன்னும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக், நார்வே தமிழ் சினிமா விருதை பெற்றார்.

அதனை தொடர்ந்து நீதானே பாடலுக்காக பாடகி ஸ்ரேயாவும் விருது பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு மெர்சல் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இணையதளமான Google ல் அதிக தேடப்பட்ட படம் என்னும் சிறப்பை மெர்சல் பெற்றது.

தற்போது பத்மாவத் படமும் அப்படி ஒரு சிறப்பை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 115 நாடுகளில் இப்படத்தை பல டேக்குகளால் தேடியுள்ளனர்.