Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

அஜித் நடிக்கும் விஸ்வாஸம் படத்தை இயக்க சிவா தயாராகி வருகிறார். இப்படத்திற்கான ஷூட்டிங் வரும் ஃபிப்ரவரி 22 ல் தொடங்குகிறது. இதற்கிடையில் இப்படத்தை விவேகம் படம் போல 4 மாதங்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ரசிகர்கள் ஷூட்டிங் தொடங்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகிறது. பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

அவரின் நடிப்பில் நாளை படை வீரன் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஸ்வாஸம் படம் குறித்த தகவலை விஜய் யேசுதாசும் உறுதிபடுத்தியுள்ளதாக மலையாள வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.