Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்விட்டர் சண்டையால் வருத்தமான TSK தயாரிப்பாளர்!

தற்போது ட்விட்டரில் விமர்சகர் ஒருவர் கடந்த மாதம் வந்த படங்கள் பற்றி பொதுவான கருத்தை கூறியுள்ளார். இது அதில் தானா சேர்ந்த கூட்டம் ஃபிளாப் என சொல்லியதாக கூறப்படுகிறது. தற்போது வார்த்தை மோதலாகியுள்ளது.

இதனால் அப்படத்தின் இயக்குனர் கோபத்துடன் பதிவிட விசயம் சூடுபிடித்துள்ளது. இதில் சில விமர்சகருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இயக்குனருக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது ட்விட்டரில் வசூல் பற்றி சண்டையிடும் ரசிகர்களுக்கு நடிகர், நடிகைகளின் நடிப்பு, படம் பற்றி பேச ஒன்றுமே இல்லையா என கேட்டுள்ளார்.

வசூல் நிலவரம் கண்காணிப்பவர்கள், திரைப்பட விமர்சகர், ஊடகவியலாளர் என போட்டிக்கு நடுவே ஒன்றாகி விட்டது. அவர்கள் தேவையில்லாத தகவல்களை கொடுத்துவிடுகிறார்கள்.

ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். வசூலையும் தாண்டி விசயம் இருக்கிறதே. அதை பற்றி பேசவில்லையா என கேள்வி எழுப்பியுளார்.