Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

களத்தில் இறங்கிய கமல் ரசிகர்கள்! மக்கள் பாராட்டு

நடிகர் கமல்ஹாசன் அரசியல் முடிவு பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. அவர் தன் சுற்றுப்பயணத்தை வரும் 21 ம் தேதி மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து துவங்குகிறார்.

இந்நிலையில் அவர் அதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் அவரது திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் பலர் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகளை செய்துள்ளனர்.

அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து குப்பைகளை அகற்றியுள்ளனர். கடலில் குப்பைகள் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. என குப்பைகள் சேராமல் பார்த்துகொள்ள வேண்டும் என விழிப்புணர்வும் செய்துள்ளனர். இதை பலரும் வாழ்த்தியுள்ளனர்.