Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல நாள் பிரிவு, படைவீரன் படத்தால் ஒன்று சேர்ந்த அதிசயம்!

விஜய் யேசுதாஸ் அப்பா யேசுதாஸ் போல இனிமையான குரல்வளம் கொண்டவர். தமிழ், மலையாளம் என பல படங்களில் பாடியுள்ளார். ஒரு படத்தில் பாடகராக நடித்தார்.

ஆனால் விஜய் நடிப்பது யேசுதாஸ்க்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்க வில்லையாம். அதையும் தாண்டி மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனால் அப்பா மகனிடம் பேசவே இல்லையாம்.

படத்தையும் பார்க்கவே இல்லையாம். அண்மையில் வெளியான படை வீரன் படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். நீண்ட நாட்கள் மகனுடன் பேசாமலேயே இருந்த யேசுதாஸ் மனம் இறங்கி இந்த படத்தை பார்த்தாராம்.

அவர் மட்டுமல்ல. குடும்பத்தோடு பார்த்திருக்கிறார்கள். மகனின் நடிப்பை பார்த்துவிட்டு யேசுதாஸ் அவரை பாராட்டியதோடு மகனிடம் சகஜமாக பேசி வருகிறாராம். விஜய்க்கு இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

படை வீரன் திரை விமர்சனம் படிக்க இங்கே கிளிக் செய்யலாம்