Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகரின் போனை உடைத்து எறிந்த நடிகை!

சினிமா படங்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் தங்களின் அன்பிற்குரிய பிரபலங்களை தீவிரமாக ரசிப்பவர்களும் உண்டு. ஆனாலும் சிலர் அவர்களையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

அப்படி தான் தெலுங்கு நடிகை அனுசூயா பரத்வாஜ்க்கு நடந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வரும் பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். டிவி சானலில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தார்னா என்ற பகுதியில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமான நடிகை அவரின் போனை பிடுங்கி உடைத்து எறிந்துள்ளார்.

இதனால் அந்த ரசிகரின் அம்மா அனுசுயா மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.