Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் ரஜினி செய்த ஆச்சர்யமான விசயம்! காலா ஸ்பெஷல்

காலா படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாவது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நேற்று இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார்.

மிரட்டும் தோற்றத்தில் அருகில் நாயுடன் நாற்காலியில் கால் மேல் கால் போடு உட்கார்ந்த லுக் பலரையும் பேசவைத்துவிட்டது. படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு துவங்கிவிட்டது.

இப்படத்திற்காக ரஜினி இரண்டரை மணிநேரத்திலேயே படத்திற்காக முழுமையான டப்பிங்கையும் பேசினாராம். அதுவும் எப்படி தெரியுமா? இரண்டு நாட்களாக 2.0 படத்திற்காக அவரின் டப்பிங் ரகசியமாக நடைபெற்றுள்ளது.

மூன்றாம் நாள் காலையில் 2.0 படத்திற்கு பேசிமுடித்திருக்கிறார். சிறு ஓய்வுக்கு பிறகு அப்படியே காலா படத்திற்காக டப்பிங்கையும் முடித்து கொடுத்துவிட்டாராம்.

பின் இரவு வரை இருந்து எல்லா டையாலக்குகளையும் சரி பார்த்துவிட்டு பிறகு தான் வீட்டிற்கு சென்றாராம்.