Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் நடந்த விபரீதம்! தலை தெறிக்க ஓடிய இயக்குனர்

மலையாள பட இயக்குனர் மிருதுள் நாயர் பி.டெக் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் ஆசிஃப் அலியும், 8 தோட்டாக்கள் அபர்ணாவும் நடித்து வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சைஜூ குரூப், நிரஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

அப்போது கர்நாடகவை சேர்ந்த அந்த துணைநடிகர்கள் அவர்களை விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது நிஜமாகவே துணை நடிகர்கள் படத்தின் நடிகர்கள் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான இயக்குனர் கட் என சொன்ன பிறகும் அவர்கள் சாலையில் உள்ள இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சியாகியுள்ளது.