Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய பிரபலத்தை சந்திக்கும் கமல் ஹாசன்! எழுச்சி ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசன் பல விசயங்களுக்கு சமூகத்தில் குரல் எழுப்பி வருகிறார். இப்போது நேரடியாக களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.அவரின் அரசியல் முன்பே ஆரம்பமானாலும் அவரின் புது வருகைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம்.

தற்போது தமிழ்நாட்டில் அவரின் அரசியல் வருகைக்கும் சினிமா தரப்பிலும் இளைஞர்கள் தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் ஃபிப்ரவரி 21 ல் அவர் தன் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்காக அவர் மூத்த அரசியல் வாதியான கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தேதி கேட்டு கமல் தரப்பு தூது அனுப்பியுள்ளதாம்.