Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சவரக்கத்தி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

அண்மையில் வெளியான படங்களில் சவரக்கத்தி அதிக ரேட்டிங்ஸ் வாங்கி வருகிறது. இதில் தரமணி இயக்குனர் ராம், துப்பறிவாளன் இயக்குனர் மிஷ்கின், நடிகை பூர்ணாவும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிஷ்கினின் கதையமைப்பில் அவரது உறவினர் ஆதித்யா இயக்கியுள்ளார். ஒரு எளிமையான கதையை வித்தியாசமாக கொடுத்து, போன போக்கில் இயல்பாக வரும் காமெடிகள் என இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ரஞ்சித் பாராட்டியுள்ளார். மேலும் அவர் நான் படத்தை பார்த்து எஞ்சாய் செய்தேன். செம ஜாலி. ராம், மிஷ்கின், பூர்ணா என நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆதித்யாவுக்கு வாழ்த்துக்கள். நல்ல விமர்சனங்களையே கேட்கிறேன் என கூறியுள்ளார்.